நாகை அருகே பரபரப்பு வங்கிக்குள் புகுந்து உதவி மேலாளர் மீது தாக்குதல்

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பாங்கல் கிராமத்தை சேர்ந்த செல்வம் மனைவி கமலவேணி(50). இவர், கொளப்பாடில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக்குழு கடன் பெற விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பான சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கமலவேணி விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் வங்கி உதவி மேலாளர் பிரித்விராஜ் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனில் பேசிய கமலவேனியின் மூத்த மகன் கோபி ஆனந்த்(31), மாலை 6 மணிக்கு மேல் எதற்கு போன் செய்கிறீர்கள் என்று உதவி மேலாளரிடம் கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் கோபி ஆனந்த், அவரது தம்பி முத்தழகன் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் வங்கிக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த உதவி மேலாளரிடம் கோபி ஆனந்த் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை வெளியே இழுத்து சரமாரி தாக்கியுள்ளார். இதை பார்த்த சக ஊழியர்கள் தடுக்க வந்த போது, அண்ணன் மற்றும் தம்பி இருவரும் சேர்ந்து தடுக்க வந்தவர்களையும் சரமாரி தாக்கினர். இந்த சம்பவம் வங்கியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உதவி மேலாளர் பிரித்விராஜ் வலிவலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சோழவரம் அருகே குளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்