நாகூர் கந்தூரி விழா சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்

நாகப்பட்டினம்: புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் 467வது கந்தூரி விழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 24ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருவார்கள். வரும் 14ம் தேதி மாலை நாகப்பட்டினத்தில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகூர் தர்காவை சென்றடையும். அதே போல் வரும் 23ம் தேதி இரவு நாகப்பட்டினத்தில் இருந்து சந்தனகூடு ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகூர் தர்காவை சென்றடையும்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை