நாகர்கோவில் மாநகரில் காய்ச்சல் பாதிப்பை கண்டறிய வீடு வீடாக ஆய்வு: கொசு புழுக்களை கண்டறிந்து ஒழிக்கவும் நடவடிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் காய்ச்சல் பாதிப்பை கண்டறிய வீடு, வீடாக ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த வாரம் மழை பெய்த நிலையில் தற்போது வாட்டி வதைக்கும் குளிரால் சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரில் காய்ச்சல், இருமல் அதிகரித்து உள்ளது. டெங்கு காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே உருமாறிய கொரோனா பரவல் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகர் நல அலுவலர் ராம்குமார் தலைமையில் 4 வித ஆய்வுகள் நடக்கின்றன.  கொசு புழு ஒழிப்பு மற்றும் டெங்கு கட்டுப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் மாநகராட்சியில் உள்ள 318 கொசு ஒழிப்பு படையினர், 8 மலேரியா கண்டறியும் குழுவினர் மற்றும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் உள்ள 7 சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையின் கீழ் செயல்படும். ஒவ்வொரு குழுவும் தினசரி ஒரு வார்டு வீதம், ஒரு நாளைக்கு 7 வார்டுகளில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுட்டு வருகிறார்கள். ஒரு தெருவில் 2 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அந்த தெருக்களில் உள்ள அனைவரிடமும் சோதனை நடத்தப்படுகிறது. காய்ச்சல், இருமல் உள்ளதா? எத்தனை நாட்களாக உள்ளது? என்பது பற்றி ஆய்வு குழுவினர் பரிசோதனை செய்கிறார்கள். இந்த ஆய்வின் போது, வீட்டின் உட்புறம் தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்கள், தொட்டிகள், ரெப்ரிஜிரேட்டர்கள் மற்றும் வெளிப்புறங்களில் கொசு புழு உற்பத்தி உள்ளதா என்பதனை ஆய்வு செய்கிறர்கள். ஆய்வு நடைபெறும் வார்டுகளில் சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுவதுடன், முழுமையான சிறப்பு தூய்மை பணிகளும் நடைபெறும். இன்று காலை நாகர்கோவில் நாகராஜா கோயில் பகுதியில் உள்ள தெருக்களில் ஆய்வு பணி நடைபெற்றது….

Related posts

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு