நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாட்பார மேற்கூரையில் தீ தடுப்பு உலோக ஷீட்

 

நாகர்கோவில், ஜூன் 3: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. தற்போது மேலும் 2 பிளாட்பாரங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இது தவிர நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகளும் நடக்கிறது. இதன் ஒரு கட்டமாக பிளாட்பாரங்களில் உள்ள மேற்கூரைகள் சீரமைக்கப்படுகிறது. பிளாட்பார மேற்கூரையின் நீளமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர மாற்று திறனாளிகள் நடந்து செல்லும் வகையில் தனியாக அதற்கான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் பிளாட்பாரத்தில் கிரானைட் பதிக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளின் ஒரு கட்டமாக பிளாட்பார மேற்கூரையில், தீ தடுப்புக்கான அலுமினிய உலோக கலவை பொருந்திய 3 டி வடிமைப்புகளுடன் கூடிய மேற்கூரை பதிக்கப்படுகிறது. இது கூலிங் தன்மையும் கொண்டதாகும்.

அதிக வெப்ப நிலையை சமாளிக்கும் வகையில் செயல்படுவதுடன், மழை காலங்களில் நீர் கசிவையும் தடுக்கும் என அதிகாரிகள் கூறினர். பிளாட்பார மேற்கூரையில் மின் ஒயர்கள் செல்கின்றன. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால், கூட உலோக கலவை மூலம் தீ பரவலை தடுக்க முடியும். இதன் காரணமாக பிளாட்பார மேற்கூரைகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். இந்த மேற்கூரைகள் பச்சை, வெள்ளை வண்ணத்தில் பதிக்கப்படுகிறது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு