நாகர்கோவிலில் 80 வக்கீல்கள் மீது புதிய சட்ட திருத்தத்தில் வழக்கு

நாகர்கோவில், ஜூலை 4: ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுவையில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த 1ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவிலில் நேற்று முன் தினம் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதிமன்றத்தின் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வக்கீல்கள் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தற்போது இது தொடர்பாக கோட்டார் எஸ்.ஐ. சத்தியசீலன் அளித்த புகாரின் அடிப்படையில் போராட்டம் நடத்திய 80 வக்கீல்கள் மீது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய சட்ட திருத்தமான பி.எஸ்.என். பிரிவு 189 (2), 126 ,292 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை