நாகர்கோவிலில் ரூ.47 லட்சம் செலவில் சாலைப்பணி: மேயர் தொடங்கி வைத்தார்

 

நாகர்கோவில், பிப். 2: நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட தொல்லவிளை அய்யா கோயில் முன்புறம் அலங்கார தரை கற்கள் பதித்தல் மற்றும் காங்கிரீட் சாலைகள் சீரமைப்பு பணி நேற்று ரூ.7.50 லட்சம் செலவில் நடந்தது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கிவைத்தார். இதுபோல் மேலசூரங்குடி சானல்கரை பகுதியில் ரூ.32 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி, 22வது வார்டுக்குட்பட்ட ஏசுவடியான் தெருவில் ரூ.7.50 லட்சம் செலவில தார் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் பால்தேவராஜ், சுகாதார அலுவலர்கள் மாதவன்பிள்ளை, முருகன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், திமுக மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், பகுதி செயலாளர்கள் ஜீவா, ஷேக்மீரான், மற்றும் நிர்வாகிகள் தொல்லவிளை குமார், வட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், சந்திரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்