நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் மயிலாடுதுறையில் வட்டார கல்வி அலுவலர்கள், ‘நான் முதல்வன்’ திட்ட தேர்வு

 

மயிலாடுதுறை, செப். 11: மயிலாடுதுறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான நேரடி நியமனத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான நேரடி நியமனத்தேர்வு மற்றும் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ‘நான் முதல்வன்’, தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் குடிமைப் பணி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்ட தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வுகளை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்களுக்கான நேரடி நியமனத் தேர்வு எழுதுவதற்கு, 508 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 416 பேர் தேர்வு எழுதினர்.
இதேபோல் ‘நான் முதல்வன்’ மற்றும் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் குடிமைப் பணி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்ட தேர்வில் 203 ஆண்களும், 224 பெண்களும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 114 ஆண்களும், 147 பெண்களும் தேர்வுக்கு வந்திருந்தனர். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 10 மாதங்களுக்கு ரூ.7,500 வீதம் ஊக்கத்தொகையும், அதனைத் தொடர்ந்து தேவையான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
கலெக்டர் ஆய்வின்போது, டிஆர்ஓ மணிமேகலை, இணை இயக்குநர் (தொழிற்கல்வி) ஜெயக்குமார், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, ஆர்டிஓ யுரேகா ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை