நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி கோயிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 

நாகப்பட்டினம்,செப்.20: நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதி நாலுகால் மண்டபம் அருகில் புகழ் பெற்ற மெய்கண்ட மூர்த்தி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் குமரன் கோயில் என பக்தர்களால் அழைக்கப்படும். இந்த கோயில் வாசலில் வலது புறம் கலையழகு மற்றும் கோயில் முகப்பு தோற்றத்தை சீர்குலைக்கும் வகையில் தனிநபர் 237 சதுர அடியை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நாகப்பட்டினம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் புகார்கள் வந்தது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ராணி தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியர் அமுதா, செயல் அலுவலர் வீரவிநாயகஜெயந்த் மற்றும் சிறப்பு பணி திருக்கோயில் செயல் அலுவலர்கள் மணிகண்டன், பூமிநாதன், தனலெட்சுமி, அசோக்ராஜா, நாகப்பட்டினம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சதீஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகள் நடத்தினர். ஆய்வின் போது கோயில் கலை அழகு மற்றும் மு’பு தோற்றம் மறைக்கப்படும் வகையில் இருந்த கடையை அதிரடியாக அகற்றினர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்