நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

 

நாகப்பட்டினம்,செப்.20: நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலலாளர் அண்ணாசாமி வரவேற்றார். பொருளாளர் சிங்காரவேலு வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். ஒன்றிய அரசு வழங்குவது போல் மாநில அரசு மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும்.

மகாராஷ்டிர அரசு அறிவித்தது போல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எல்லா ஓய்வூதியர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.4 ஆயிரம் விழா முன்பணம் வழங்கி அவர்களது ஓய்வூதியத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.400 வீதம் பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இணைச் செயலாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்