நாகப்பட்டினம் நகர பகுதியில் இயங்கும் அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்யக்கூடாது

 

நாகப்பட்டினம்: சிவசேனா கட்சி மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் நகர பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகே நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பல ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தூர் பகுயில் உள்ள நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வது நாகப்பட்டினம் மாவட்ட மக்களை வஞ்சிக்கும் செயலாக அமையும்.

ஒரத்தூரில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று வரை போதுமான பேருந்து வசதிகள், விரைவாக செல்லக்கூடிய வகையில் சாலை வசதிகளும் அமையவில்லை. நாகப்பட்டினம் நகர பகுதியில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் வசிக்கின்றனர். எனவே நாகப்பட்டினம் நகர பகுதியில் வரும் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை அங்கேயே செயல்படும் வகையில் மருத்துவ கல்லூரியின் உறுப்பு கிளை மருத்துவமனையாக அல்லது சார்பு மருத்துவமனையாக செயல்பட செய்ய வேண்டும். அவசர கால சிகிச்சைக்கான மருத்துவமனையாக நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை இயங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தொடர் கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ₹15 லட்சம் வைப்பு தொகை

காவிரிநீரை பெற்றுதரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை