நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்

 

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் நாகூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதன்படி நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நாகூர் பட்டினச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, ரூ.7 லட்சம் மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை மேம்பாட்டு பணி, நாகூர் மியா தெருவில் உள்ள நாகூர் இஸ்லாம் நடுநிலைப்பள்ளி ரூ.6.20 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, நாகூர் சையது பள்ளி குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, நாகூர் அம்பேத்கர் நகர் பீரோடும் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

நாகப்பட்டினம் வடக்கு பால்பண்ணைச்சேரி எம்ஆர்பி நகரில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை கட்டடம் கட்டும் பணி, தம்பிதுரை பூங்காவில் ரூ.16 லட்சம் மதிப்பில் மறு சீரமைப்பு பணி ஆகியவற்றை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் விஜய்கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு