நாகப்பட்டினம் அருகே 1929ல் திருடப்பட்ட செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: பலகோடி மதிப்புடையது

சென்னை: நாகப்பட்டினம் அருகே அமைந்துள்ள கைலாசநாத சுவாமி கோயிலில் இருந்து 1929ம் ஆண்டு திருடப்பட்ட பல கோடி மதிப்புள்ள ஐம்பொன்னால் ஆன செம்பியன் மகாதேவி சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாத சுவாமி கோயிலில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஐம்பொன்னால் ஆன செம்பியன் மகாதேவி சிலை திருடப்பட்டுள்ளதாக யானை ராஜேந்திரன் என்பவர் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் 2018ம் ஆண்டு புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.  புகார் அளித்த நபர், கைலாசநாத சுவாமி கோயிலில் இருந்து செம்பியன் மகாதேவி சிலை 1959ம் ஆண்டுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துணையுடன் திருடப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில், மூன்றரை அடி உயரம் உள்ள செம்பியன் மகாதேவி சிலை, இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே, அதாவது 1929ம் ஆண்டு காலத்தில் கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. அப்போது செம்பியன் மகாதேவி சிலைக்கு மாற்றாக போலியான சிலையை கோயிலில் வைத்து சிலை திருடப்பட்டு, சர்வதேச கும்பல் மூலம் அமெரிக்காவில் உள்ள பழங்கால பொருட்கள் சேகரிக்கும் ஹகோப் கெவோர்சியன் என்பவரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.பிறகு ஹகோப் கெவோர்சியனிடம் இருந்து அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியம் ஒன்று செம்பியன் மகாதேவி சிலையை வாங்கியதும் விசாரணை மூலம் உறுதியாகியுள்ளது. இதனால் இந்த சிலை திருட்டுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவருகிறது. சிலை திருடப்பட்ட காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை தொடங்கப்படவில்லை. அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள செம்பியன் மகாதேவி சிலையை யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் கைலாசநாத சுவாமி கோயிக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் செய்து வருகின்றனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்