நாகப்பட்டினம் அருகே திருக்குவளை பகுதியில் பாலங்கள் சீரமைக்கும் பணி

 

நாகப்பட்டினம்,செப்.25: நாகப்பட்டினம் அருகே திருக்குவளை பகுதியில் பாலங்கள் சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நாகப்பட்டினம் அருகே திருக்குவளை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ் அறிவுரையின் படி கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆலோசனையின் பேரில் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகளில் மழைக்கால முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள், நீர்வழிப்பாதைகள் சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி, சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கோட்ட பொறியாளர் நாகராஜன் ஆய்வு செய்தார்.உதவி கோட்ட பொறியாளர் விவேகானந்தன், உதவிப்பொறியாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு