நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கு சுலோகம் அனுப்பலாம்: கலெக்டர் தகவல்

 

நாகப்பட்டினம்,ஜூன்26: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 3வது புத்தக திருவிழாவிற்கு வரும் 30ம் தேதிக்குள் சுலோகம் அல்லது லட்சனை அனுப்ப வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழில் பயிற்சி நிறுவன மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3வது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்த புத்தக திருவிழாவிற்கு லட்சனை மற்றும் சுலோகம் தயார் செய்து வரும் 30 தேதிக்குள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக nagaibookfair2024@gmail.com என்ற இணைய தள முகவரியிலோ, 9994479272 அலைபேசி எண்ணிற்கோ அனுப்பலாம். இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் லட்சனை மற்றும் சுலோகம் இந்த ஆண்டிற்கான புத்தகத் திருவிழாவிற்கான லட்சனை மற்றும் சுலோகமாக ஏற்றுக் கொள்ளப்படும். சிறந்த லட்சனை மற்றும் சுலோகம் உருவாக்கியருக்கு புத்தக திருவிழா மேடையில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்