நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம்,ஜன.13: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாகப்பட்டினம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு குழுவின் தனுசுமணி, எழிலரசன், அருண்மொழி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் சித்ரா, மாவட்ட இணை செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் லட்சுமி நாராயணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். புதிய ஒய்வூதிய திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். தொடக்க கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டு காலமாக இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமை என்பதை மாற்றி அரசாணை எண் 243ன்படி மாநில முன்னுரிமை என மாற்றியதை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை