நாகப்பட்டினத்தில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம், ஜூன் 27: நாகப்பட்டினத்தில் நடந்த உலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினத்தில் நடந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமை வகித்தார். கோட்ட கலால் அலுவலர் ரமேஷ் வரவேற்றார். கலால் உதவி ஆணையர் பரிமளா, டிஎஸ்பிக்கள் முத்துக்குமார், அப்துல்ரகூப், சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்பி ஹர்ஷ்சிங் பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணி நாகப்பட்டினம் அவுரித்திடலில் தொடங்கி பப்ளிக் ஆபிஸ் சாலை வழியாக ஆர்டிஓ அலுவலகத்தை சென்றடைந்தது. அங்கு டிஆர்ஓ அரங்கநாதன் தலைமையில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து போதை பொருள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி சர்ட், மரக்கன்றுகள் ஆகியவை வழங்கப்பட்டது. பேரணியின் போது போதை பொருள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள், போதை பொருளில் இருந்து விடுபடுவது ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்திச்சென்றனர். போதை பொருளால் நாட்டிற்கு ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுகளை கோஷங்களாக எழுப்பி சென்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு