நவ்ஜோத் கவுருக்கு கொரோனா

இந்திய மகளிர் ஹாக்கி அணி இப்போது காமன்வெல்த் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் கானாவை வீழ்த்திய இந்திய அணி அடுத்து  வேல்ஸ் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்துக்கு முன்பாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் நடுகள வீராங்கனை நவ்ஜோத் கவுருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால்  உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட நவ்ஜோத் தொடர் கண்காணிப்பில் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மேற்கொண்ட சோதனையில் மேக்னா சிங், பூஜா வஸ்த்ராகர் ஆகியோருக்கு தொற்று உறுதியானது. ஆனால் அவர்கள் இப்போது குணமடைந்துள்ளனர். மேக்னா ஏற்கனவே அணியுடன் இணைந்துள்ள நிலையில் ஆக.3ம் தேதி நடைபெறும் போட்டிக்கு முன்பு பூஜா அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது….

Related posts

சீனா ஓபன் டென்னிஸ் வது சுற்றில் ஹடாஜ் மாயா

88 ரன்னில் சுருண்டு ஃபாலோ ஆன்; தோல்வியின் பிடியில் நியூசிலாந்து

சில்லி பாயின்ட்…