நவீன கழிப்பிடங்கள், கடைகள் கட்டப்பட உள்ளது புதிய பொலிவு பெறும் போடி பஸ்நிலையம்-ரூ.3 கோடியில் புனரமைப்பு பணி தொடக்கம்

போடி : போடியில் நகராட்சி பஸ்நிலையத்தில் ரூ.3 கோடியில் சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது.போடியில் நகராட்சி பஸ்நிலையம் உள்ளது. இதன் நுழைவு வாயிலில் இரண்டு தூண்கள் உள்ளன. இவை இரண்டும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே சிறுநீர் கழிப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், தூண்களை ஒட்டியுள்ள டூவீலர் மற்றும் சைக்கிள் ஸ்டாண்ட் ஆகியவையும் மோசமான நிலையில் உள்ளது. இதை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.3 கோடியில் புனரமைப்பு பணி தொடங்கியுள்ளது. பஸ்நிலைய நுழைவு வாயிலில் முன்பகுதியில் உள்ள இரு தூண்களை ஜேசிபியால் இடித்து, அருகில் உள்ள சைக்கிள், டூவீலர் ஸ்டாண்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட உள்ளன. பொதுமக்கள் இடையூறின்றி பஸ் ஏறிச் செல்லவும், வளைவு ஆர்ச் கடைகள், புதிய நவீன கழிப்பிடங்கள், கடைகள் கட்டப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள், பயணிகள், ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்