Friday, July 12, 2024
Home » நவம்பர் 25 முதல் பல்வேறு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு..!

நவம்பர் 25 முதல் பல்வேறு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு..!

by kannappan

சென்னை: நவம்பர் 25 முதல் பல்வேறு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில்வே வாரியம் கீழ்க்கண்ட 9 ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில்களை வரும் 25ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மதுரை-புனலூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16729), புனலூர்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (16730) எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் ரயில் எண் (22609), கோவை-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (22610) இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16605), நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16606) எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் ரயில் எண் (12605), காரைக்குடி-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12606) பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகளும், எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (12635), மதுரை-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12636) வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகளும், தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16191), நாகர்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16192) அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கபட்டு வரும் 25ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரல்-கோவை இடையே இயக்கப்படும் ரயில் எண் (12679), கோவை-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12680) இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும், நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16791), பாலக்காடு-நெல்லை இடையே இயக்கப்படும் ரயில் எண் (16792) பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16649) பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் 2 முன்பதிவில்லா பெட்டிகளும், நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16650) பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டு வரும் 25ம் தேதி முதல் இணைக்கப்பட்டு இயக்கப்படும்….

You may also like

Leave a Comment

thirteen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi