நவதானிய தோசை

எப்படி செய்வது?முதலில் உளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். மொச்சை பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, காராமணி இவைகளை கழுவி இரவே ஊற வைக்கவும். முந்திரி, வேர்க்கடலையை தவிர மற்ற பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் முந்திரி, வேர்க்கடலையை சிவக்க வறுத்து ரவை போல பொடிக்கவும். பின் இவைகளை உப்புடன் சேர்த்து நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். இத்துடன் நறுக்கிய பல்லாரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கி தோசையாக வார்க்கவும். எண்ணைய் ஊற்றி திருப்பி போடவும்.உடலுக்கு வலு சேர்க்கும் நவதானிய தோசை தயார்.

Related posts

பிரெட் போண்டா

தக்காளி பிரியாணி

காலிஃபிளவர் புலாவ்