Wednesday, July 3, 2024
Home » நல்ல பலன்களை பெற…

நல்ல பலன்களை பெற…

by kannappan

ஸ்ரீகிருஷ்ண பகவான் சொல்கிறார்.கிம்தே நாம ஸஹஸ்ரேண விஜ்ஞாதேன தவார்ஜுன |தானி நாமானி விஜ்ஞாய நர: பாபை: ப்ரமுச்யதேன ||ப்ரதமே து ஹரிம் வித்யாத் த்விதீயம் கேசவம் ததா |த்ருதீயம் பத்மநாபஞ்ச சதுர்த்தம் வாமனம் ஸ்மரேத் ||பஞ்சமம் வேத கர்ப்பஞ்ச ஷஷ்டஞ்ச மதுஸூதனம் |ஸப்தமம் வாஸுதேவஞ்ச வராஹஞ்சாஷ்டமம் ததா ||நவமம் புண்டரீகாக்ஷம் தசமம் ஹி ஜனார்த்தனம் |க்ருஷ்ணம், ஏகாதசம் வித்யாத் த்வாதசம் ஸ்ரீதரம் ததா ||த்வாதசைதானி நாமானி விஷ்ணு ப்ரோக்தான்யனேகச: |ஸாயம் ப்ராத: படேந்நித்யம் தஸ்ய புண்ய பலம் ஸ்ருணு ||சாந்தராயன ஸஹஸ்ராணி கன்யாதான சதானி ச |அச்வமேத ஸஹஸ்ராணி பலம் ப்ராப்னோத்ய ஸம்ச்ய: ||அமாவாஸ்யாம் பெளர்ணமாச்யாம் ச த்வாதச்யாம் விசேஷத: |ப்ராத: காலே படேந்தித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||இதி ஸ்ரீ மஹாபாரதே வனபர்வணிஸ்ரீ கிருஷ்ண த்வாதச நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்ஹே அர்ஜுனா! விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை தெரிந்து கொள்வதால் என்ன பலனுண்டோ அதை இந்த 12 நாமாக்களை (ஸ்ரீகிருஷ்ண த்வாதச நாமாக்களை) அறிவதனாலேயே அடைவதோடு, எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.12 நாமாக்களையும் ஸ்ரீ கிருஷ்ணனே அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். இதில் 12 நாமாக்களும் ஸ்ரீவிஷ்ணுவினால் பலமுறை வைகுண்டத்தில் உபதேசிக்கப்பட்டவை. காலை, மாலை இதை ஜபம் செய்பவனுக்கு ஏற்படும் புண்ணியத்தை சொல்கிறேன் கேள்: ஆயிரம் சாந்திராயன க்ருச்சரத்தை அனுஷ்டித்த பலனையும், 100 கன்னிகாதான பயனையும், 1000 அச்வமேதம் செய்த பலனையும் நிச்சயம் அடைவார். அதிலும் அமாவாஸ்யை, பௌர்ணமி, த்வாதசி இந்த தினங்களில் காலையில் படிப்பதால் ஸர்வ பாபங்களிலிருந்து விடுபட்டு ஸகல ஸௌபாக்கியங்களும் அடைகிறார்கள். ஸ்ரீக்ருண உவாச.குரு மந்திரம்வியாழக்கிழமைகளிலோ, தினமுமோ இருவேளையும், முடியா விட்டால் ஒரு வேளையாவது படிப்பது நல்லது. குரு பீடை விலகும்.1 ஸ்ரீ கணேசாய நம: ||குரூர் ப்ருஹஸ்பதிர் ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர: |வாகீஸோ தீக்ஷணோ தீர்கஸ்மஸ்ரூ: பீதாம்பரோயுவா: ||குருவும், பிரகஸ்பதியும் என் ஜீவனும், தேவர்களின் ஆசார்யனும், புத்திசாலிகளில் சிறந்தவனும், வாக்கிற்கு ஈஸ்வரனும், புத்தி வடிவானவனும், நீண்டதாடி, மீசை உள்ளவனும், பீதாம்பரம் அணிந்தவனும் என்றும் இளமையோடிருப்பவனும்.2. ஸுதா த்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடா பஹாரக: |தயாகர: ஸௌம்ய மூர்த்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி: ||அம்ருதமயமான பார்வையுடனும், கிரகங்களின் தலைவனும், கிரஹ பீடையைப் போக்குகின்றவனும், கருணைக்கிருப்பிடமானவனும், அழகிய வடிவம் கொண்டவனும், தேவர்களால் பூஜிக்கத்தக்கவனும், பூமொட்டைப் போன்ற காந்தியுடையவனும்.3. லோக பூஜ்யோ லோக குருர் நீத்க்ஞோ நீதிகாரக: |தாராபதிஸ் சாங்கிரஸோ வேத வேத்ய: பிதாமஹ: ||உலகங்களெல்லாம் பூஜிக்கத் தகுந்தவனும், லோககுருவும், நீதி சாஸ்திரமறிந்தவனும், நீதியை உருவாக்குபவனும், தாரையின் கணவனும், அங்கிரஸ் முனிவருடைய புதல்வனும், வேதங்களால் அறியத் தக்கவனும், பிதாமஹனும்.4. பக்த்ய ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யே தானிய: படேத் |அரோகி பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸபவேன் நர: என்ற இந்த குருவின் புகழை எவரெவர் பக்தியுடன் படிக்கிறார்களோ அவன் வியாதிகளிலிருந்து விடுபட்டவனாகவும், பலவானாகவும், செல்வந்தனாகவும், புத்திர சம்பத்துள்ளவனாகவும் ஆகிறான்.5. ஜீவேத் வர்ஷ ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி |ய: பூஜயேத் குருதினே பீத கந்தாக்ஷதாம்பரை: ||6. புஷ்ப தீபோ பஹாரைஸ்ச பூஜித்வா ப்ருஹஸ்பதிம்: |ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடா ஸாந்திர் பவேத் குரோ: ||அவன் நூறு வயது வாழ்ந்திருப்பான். பாபங்கள் நிச்சயம் அழியும். குரு வாரத்தன்று மஞ்சள் நிறமுள்ள சந்தனம், அட்சதை, புஷ்பம், வஸ்திரம் இவைகளாலும் தீபம், தூபம், நிவேதனம், கற்பூரம் இவற்றாலும் பிரகஸ்பதியை பூஜிப்பவர், பூஜை முடிந்தபின் அந்தணர்களுக்கு அன்னமிடுபவர் இவர்களுக்கு குருபீடையினால் எந்தக் கஷ்டமும் ஏற்படாது.அனுஷா…

You may also like

Leave a Comment

eleven − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi