நல்ல திட்டங்களை செயல்படுத்துவேன்: டி.கே.எம்.சின்னையா உறுதி

சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா நேற்று சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் சானிடோரியம், ஆஞ்சநேயர் கோயிலில் தொடங்கி, 18 வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர்.  பிரசாரத்தின் போது சின்னையா பேசுகையில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிட்லப்பாக்கம் ஏரியின் கொள்ளவை உயர்த்தியும், அதனை சீரமைத்து நடைபயிற்சிக்கான பாதையும் அமைத்து கொடுத்தார்.  2015ம் ஆண்டு வெள்ளம் வந்த பிறகு சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதி வெள்ளக்காடாக மாறியது. இந்த நிலைமை மீண்டும் வரக்கூடது என்பதை உணர்ந்து முதல்வர் எடப்பாடி கட்அவுட் கால்வாய் அமைத்து கொடுத்தார். சீரான மின்சாரம் கிடைப்பதற்கு துணை மின் நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டது. இது போன்ற பல நல்ல திட்டங்களை முதல்வர் எடப்பாடி அரசு சிட்லப்பாக்கம் பகுதியில் செய்துள்ளது. இதுபோன்ற பணிகள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். அதிமுக சிட்லபாக்கம் பேரூராட்சி செயலாளர் மோகன்,  பரங்கிமலை ஒன்றிய செயலாளர் எம்.சி.கிருஷ்ணன், பாஜக செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், பேரூர் பாஜ தலைவர் சுரேஷ்குமார்,  பாமக நிர்வாகிகள் விநாயகம், வக்கீல் சுரேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்….

Related posts

சொல்லிட்டாங்க…

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்