நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல், ஜன.23: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 318 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களை பரிசீலனை செய்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது காதப்பள்ளியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி வசந்தாவிற்கு, ₹6,840 மதிப்பில் சக்கர நாற்காலியை வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்