நற்பணி மன்றத்தில் அணிகளை உருவாக்கி ரசிகர்களை சந்திக்கிறார் சிம்பு

சென்னை: சிம்பு நேற்று வெளியிட்ட அறிக்கை: இயற்கையின் செயல்களால் நீண்ட நாளாக உங்களிடம் (ரசிகர்களிடம்) நேரடியாக சந்திக்காமல் தொலைபேசி வழியாகவே பேசி வந்தோம். இப்போது இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் நற்பணி மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம். மன்றத்தின் தலைவர் டி.வாசு தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சிம்பு கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் சிம்புவும் பங்கேற்று ரசிகர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளாராம்….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை