நம்மளவச்சு டைம்பாஸ் பண்ணுறாங்க போல?: மாம்பழ கட்சியினருக்கு வந்த டவுட்

இலையும், மாம்பழமும் கூட்டாக ஓட்டுக்கேட்டு செல்லும் தொகுதிகளில் பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லையாம். இதில் மாம்பழக் கட்சி தலைவர் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் கேள்வி கேட்டே பப்ளிக் வறுத்தெடுக்குதாம். தொகுதிக்கு உட்பட்ட குப்பாங்கரை பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த  பெண்களிடம் சென்று மாம்பழ தலைவரு ஓட்டு கேட்டாராம். அப்போது பெண்கள், ‘‘நாங்க இலைக்கு ஓட்டு போடவா அல்லது மாம்பழத்திற்கு ஓட்டு போடவா?” என்றார்களாம். நாங்கள் கூட்டணியாக நிக்குறோம். அதனால இந்த தொகுதியில் மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்க என்றாராம் தலைவர்.அப்புறம் கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகையை அடமானம் வச்சு கடன் வாங்கினவங்களுக்கு அதை தள்ளுபடி செய்வோம் என்று சொல்றீங்க. கடனே வாங்காத எங்களுக்கு என்ன செய்யப்ேபாறீங்க? என்ற கேள்வியை கேட்டதும் தலைவர் ஆடிப்போயிட்டாராம். உடனடியாக மைக்கை அருகில் இருந்த விவசாய அணி மாநில தலைவர் அன்பழகனிடம் கொடுத்தாராம். ‘‘உங்களுக்கு நம்ம அரசாங்கம் நிறைய சலுகைகளை வழங்கப்போகுது. மாசம் தோறும் உங்க அக்கவுண்டில் ₹1500 வந்து சேரும்’’ என்றாராம். அது சரி இந்த பெண்கள் எல்லாம் கூட்டாக ஓட்டு கேட்க வந்த நம்மை வைத்து டைம்பாஸ் பண்றாங்களோ என்று சந்தேகத்துடன் கேட்டாராம் ஒரு முக்கிய நிர்வாகி. …

Related posts

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை

சொல்லிட்டாங்க…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் செயல்படக்கூடாது: அதிமுகவினருக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு