நம்புதாளையில் மக்களுடன் முதல்வர் முகாமில் 200 கோரிக்கை மனு வழங்கல்

தொண்டி, ஆக.13: தொண்டி அருகே நம்புதாளையில் முகிழ்த்தகம், காரங்காடு உள்ளிட்ட 6 ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கோரிக்கை மனு கொடுத்தனர். தொண்டி அருகே நம்புதாளையில் நேற்று காரங்காடு, முள்ளிமுனை, திருவெற்றியூர், முகிழ்த்தகம், நம்புதாளை, புதுப் பட்டினம் உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. திருவாடானை தாசில்தார் அமர்நாத் தலைமை வகித்தார்.

மின்சார வாரியம், குடிநீர் வாரியம், பொதுப்பணித் துறை, கல்வித்துறை, புள்ளியல் துறை உட்பட 15 துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு டெஸ்க், பெஞ்ச், இலவச வீடுகள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவி தொகை வழங்க கோரி, கண்மாய் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மனு கொடுக்கப்பட்டது.

அனைத்து மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு செல்போனிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. நம்புதாளை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம், முகில்த்தகம் தலைவி மல்லிகா கர்ண மகாராஜன், திருவெற்றியூர் தலைவி கலா முத்தழகன், புதுப் பட்டினம் தலைவர் முகமது முஸ்தபா, காரங்காடு தலைவி கார் மேல் மேரி, முள்ளிமுனை ஊராட்சி தலைவி அமிர்தவள்ளி மேகமலை, வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன், பிடி ஒ. கணேசன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி வினாயகமூர்த்தி, புள்ளியியல் துறை பாண்டியராஜ், விக்னேஷ், வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்