நந்தம்பாக்கம், ஜவஹர் கல்லூரியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் அமைப்பு: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

சென்னை: சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதற்காக 12,700 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுடன் படுக்கைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 850 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 364 படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட படுக்கைகள் ஆகும். நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்காக 11 ஆயிரம் கிலோ லிட்டர் கொண்ட சேமிப்பு கிடங்கு வசதியும் அமைக்கப்பட்டு வருவதை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று நந்தம்பாக்கம் சென்னை வர்த்த மையத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டார்.அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மணடலம் வார்டு 129ல் வீடுகள் தோறும் சென்று கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா என கணக்கெடுப்பு பணி செய்யும் பணியாளர்களுக்கு எந்த மாதிரியான சோதனைகள் செய்ய வேண்டும். பொதுமக்களிடம் எப்படி பேச வேண்டும். மேலும் கொரோனா நோயாளிகள் குறித்து என்னென்ன தகவல்கள் கேட்டு பெற வேண்டும் என்று ஆலோசனை வழங்கி முன்களப்பணியாளர்கள் வைத்திருக்கும் பதிவேட்டினை ஆய்வு செய்தார். மேலும் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது உடன் இணை ஆணையர் ஸ்ரீதர், துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஷ், மண்டல நல அலுவலர், செயற்பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். …

Related posts

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு: டிசம்பர் 31ம் தேதி வரை பராமரிப்பு மற்றும் கண்காணிக்க திட்டம்

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலத்தை கடித்து குதறிய தெருநாய்கள்