நத்தம் அருகே செந்துறையில் திராவிட மாடல் அரசின் 2ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

நத்தம், மே 10: நத்தம் அருகே செந்துறையில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், நத்தம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், பேரூர் செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஆண்டி அம்பலம், பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் விஜயன், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், மாவட்ட பிரதிநிதிகள் அழகர்சாமி, பொன்மணி, ராமன், அவைத்தலைவர் ராசு, பொருளாளர் கலிபுல்லா, பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில், ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி சிவஞானம், ஊராட்சித் தலைவர்கள் ராஜேஸ்வரி அழகர்சாமி, துர்க்க சங்கீதா பிரசாத், ராசு, மணி அழகம்மாள், பழனியம்மாள் மகாலிங்கம், செல்வி வீரன், முன்னாள் துணை ஒன்றிய செயலாளர்கள் பிச்சைமணி, ராஜா உள்ளிட்ட வடக்கு, தெற்கு ஒன்றிய நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்