நட்புடன் பழகியதால் வந்த வினை: பழச்சாறில் மது கலந்து கொடுத்து பலாத்காரம்: பாஜக இளைஞரணி மண்டல தலைவர் மீது வழக்கு

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் பழச்சாறில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக இளைஞரணி மண்டல தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த பாஜக இளைஞரணி மண்டல தலைவர் அதியாகஷ் என்ற ராஜேஷ் வஸ்தவ் மீது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வந்து போலீசில் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். அதையடுத்து  ஜபல்பூர் போலீசார் ராஜேஷ் வஸ்தவ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி  சித்தார்த் பகுகுணா கூறுகையில், ‘புகார் அளித்த பெண் ராஜேஷ் வஸ்தவ் உடன் நட்பாக பழகினார். அவர் அடிக்கடி ராஜேஷ்  வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அதனை வாய்ப்பாக பயன்படுத்தி, அந்த பெண்ணுக்கு பழச்சாறுடன் மதுவை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அவருடன் நெருங்கி பழகுதை வீடியோவில் பதிவு செய்துள்ளார். கடந்தாண்டு செப்டம்பரில் இந்த சம்பவம் நடந்தாலும் கூட, அடிக்கடி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து செல்லுமாறு ராஜேஷ்  கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு கொலை மிரட்டலும் அவரது கணவரின் செல்போனுக்கு தன்னுடன் நெருங்கி பழகிய வீடியோக்களை அனுப்புவதாகவும் அச்சுறுத்தி உள்ளார். மேலும்,  வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டி உள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். இதற்கிடையே அந்த பெண்ணின் கணவரின் செல்போனுக்கு வீடியோ, புகைப்படங்களை ராஜேஷ் அனுப்பினார். அதன் பின்னர் தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு  வந்தது. அரசு ஊழியராக இருக்கும் அந்த பெண்ணின் கணவர், பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் காவல் நிலையம் வந்து நேரில் புகார் அளித்தார். அதன் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு ராஜேஷ் வஸ்தவ் மீது இந்திய தண்டனைச்  சட்டத்தின் 376 (2-என்), 506 எல், 284 மற்றும் 384 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறோம்’ என்றார்….

Related posts

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

காரில் புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது