நட்டாலம் ஊராட்சியில் வீடுகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு

கருங்கல்,ஆக.18: கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நட்டாலம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் நட்டாலம் ஊராட்சி தலைவர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. காவு குளம் அருகில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜோபி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டடத்தில் நட்டாலம் ஊராட்சியில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யும் திட்டமான ஜன்ஜீவன் திட்டத்தில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கி நல்ல தண்ணீர் பொது மக்களுக்கு கிடைக்க வகை செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முழு சுகாதாரம், அனைத்து இடங்களிலும் தெரு விளக்குகள் அமைத்தல், கிராம பகுதிகளில் தூய்மை பணி ஆகியவற்றிக்கு முன்னுரிமை அளித்தல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை