நடைப்பயிற்சியாளர் சங்கத்தினர் 8 கிமீ தூரம் ஆரோக்கிய நடை பயிற்சி

 

தஞ்சாவூர், ஆக.19: தஞ்சாவூரில் 2வது முறையாக சத்யா நடைபயிற்சியாளர் சங்கத்தினர் 8 கி.மீ. ஆரோக்கிய நடைபயிற்சி மேற்கொண்டனர்.தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம் பெறுவோம் என்கின்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை தொடரும் வகையில், தஞ்சை சத்யா விளையாட்டு திடல் நடை பயிற்சியாளர் சங்கம் சார்பில், 2வது முறையாக நேற்று காலை 8 கிலோ மீட்டர் தூர நடைபயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை சத்யா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்க தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பார்த்தசாரதி, துணை தலைவர் கண்ணாடி குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தொடங்கிய நடைபயிற்சி புதிய பேருந்து நிலையம் வரை சென்று, மீண்டும் அதே வழியாக சத்யா விளையாட்டு திடலை வந்தடைந்தது. இதில் 94 க்கும் மேற்பட்ட நடைபயிற்சியாளர்கள், மாணவர்கள், மகளிர் பங்கேற்று 8 கிலோ மீட்டர் தூரத்தை 80 நிமிடங்களில் கடந்தனர். நிறைவாக உடல்நலம், மனநலத்தை காக்கும் நடைபயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி