நடுங்கும் குளிர் இல்லை; எரிக்கும் வெயிலும் இல்லை… இதமான வானிலையால் ஈர்க்கும் ‘இளவரசி’

* சுற்றுலா வாகனங்களால் தொடர்கிறது நெரிசல்கொடைக்கானல் : கொடைக்கானலில் குளிர், கடும் வெயில் இல்லாமல், இதமான தட்பவெப்ப நிலை தொடர்கிறது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால், நகரில் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், விடுமுறை தினம் மற்றும் சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிவர். கடந்த 2ம் தேதியுடன் நகரில் கோடை விழா நிறைவு பெற்றது. வழக்கமாக மே மாதம் முடிந்தவுடன் கோடை சீசன் முடிந்து மழை காலம் தொடங்கும். சுற்றுலாப்பயணிகள் வருகையும் குறையும். ஆனால், இந்தாண்டு 13ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளதால், நகரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது.விடுமுறை தினமான நேற்று மற்றும் நேற்று முன்தினம் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால், வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிப்பட்டனர். நகரில் கோடை விழா முடிந்ததால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 2 தினங்களாக நகரில் மழை இல்லாமல் இதமான சூழல் நிலவியது. நடுக்கும் குளிரோ, எரிக்கும் வெயிலோ இல்லாதால், இதமான சூழலில் சுற்றுலா இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்….

Related posts

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!