நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : தூண்டில் கம்பிகளை உடலில் மாட்டி சித்ரவதை ; 6 பேர் படுகாயம்!!

நாகை : நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 6 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நாகை செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 15 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மீனவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை பறித்ததாகவும், தடுக்க முயன்ற போது கூர்மையான தூண்டில் கம்பிகளை உடலில் மாட்டி சித்தரவதை செய்து தண்ணீரில் தள்ளி விட்டு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கடலில் இருந்த மற்ற மீனவர்களின் உதவியுடன் கரை திரும்பிய காயமடைந்த 6 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்….

Related posts

திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல்

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்