நடுக்கடலில் தவித்த 9 மீனவர்கள் மீட்பு

சென்னை:  தண்டையார்பேட்டை சாந்தி காலனியை சேர்ந்த  பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விசை படகில்,காசிமேடு நேதாஜி நகரை சேர்ந்த விசைப்படகு ஓட்டுநர் பிரபு, முனியப்பன், ஜெயராமன், மணி, குமார், தியாகு, தனசேகர், வடிவேல், நாகராஜ் உள்ளிட்ட 9 மீனவர்கள், கடந்த 26ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த 30ம்தேதி ஆந்திர மாநிலம், நிஜாம் பட்டினம் அருகே மீன்பிடித்த போது, விசைப்படகில்  ஓட்டை விழுந்து, 3 நாளாக தண்ணீரில் தத்தளித்தனர். தகவலின் பேரில், கடலோர காவல் படையினர் அவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள், இவர்களை மீட்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவர்களுக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்