நடுக்கடலில் தத்தளித்த 300 இலங்கை அகதிகள் மீட்பு

கொழும்பு: கனடா தப்பும் வழியில் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 300 இலங்கை அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், 300 பேர் குடும்பம் குடும்பமாக சட்ட விரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இவர்கள் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளின் கடல் எல்லைக்கு அருகாமையில் நேற்று முன்தினம் சென்றபோது, படகு திடீரென பழுதாகி உள்ளது. இதனால் படகு கடலில் மூழ்கத் தொடங்கியதால், அதிலிருந்தவர்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடுவதாக ஆடியோ பதிவு ஒன்று இலங்கை கடற்படைக்கு பகிரப்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர், வியட்நாம் நாட்டின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 315 பேரை மீட்டனர். இவர்கள் வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆவணங்களை சரிபார்த்த பிறகுதான் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்களா என்பது உறுதிபடுத்தப்படும் என இலங்கை அமைச்சர் இந்திகா டிசில்வா கூறி உள்ளார்….

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்