நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு தள்ளுபடி: அவரை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். நடிகை மீரா மிதுன் நடித்த பேயை கானோம் என்ற படத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழு ஒன்றில்  கடந்த மார்ச் 16 ஆம் தேதி  தயாரிப்பாளர் சுருளிவேல், இயக்குநர் மற்றும் முதல் அமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக தயாரிப்பாளர் சுருளிவேல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிது மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நடிகை மீரா மிதுன் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஆடியோ பதிவுசெய்யபட்ட தினத்தில் தான் ஒரு துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததாகவும், தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகை மீராமிதுன் அவதூறு பரப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், தற்போது முதல் அமைச்சர் மீது அவதூரு பரப்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதனால், மீரா மிதுனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் மீராமிதூன் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அவரை கைதுசெய்து விசாரிக்கவும், அவர் பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்