நடிகை சன்னி லியோனுக்காக ஒரு வாரம் பயிற்சி பெற்ற இயக்குனர்

சென்னை: ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி யாக நடனமாடிய சன்னி லியோன், தற்போது கதையின் நாயகியாக நடித்துள்ள படம், ‘ஓ மை கோஸ்ட்’. இதில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா நடித்துள்ளனர். ‘சிந்தனை செய்’ இயக்குனரும், டான்ஸ் மாஸ்டரு மான ஆர்.யுவன் இயக்கியுள்ளார். வாவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட், ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீரசக்தி, கே.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். படம் குறித்து ஆர்.யுவன் கூறியதாவது: இந்தப் படத்தில் ‘மாயசேனா’ என்ற மகாராணி கேரக்டரில் சன்னி லியோன் நடித்துள்ளார். அவரை ஒப்பந்தம் செய்தால், கண்டிஷன்கள் போட்டு பிரச்னை செய்வார் என்று சிலர் பயமுறுத்தினர். அதுபற்றி கவலைப்படாத நாங்கள் மும்பைக்கு சென்றோம். ஆங்கிலத்தில் கதை சொல்ல வேண்டும், அதுவும் இயக்குனர் மட்டுமே சொல்ல வேண்டும் என்று சன்னி லியோன் சொன்ன தால், அவரிடம் ஆங்கிலத்தில் கதை சொல்ல ஒரு வாரம் நான் பயிற்சி பெற்றேன். பிறகு கதை சொன்னபோது ஆர்வத்துடன் கேட்டார். ஷூட்டிங்கில் அவரது பாதுகாப்புக்கு பலர் வருவார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மும்பை ஸ்டுடியோவில் படமாக்கியதால், ஓரிருவர் மட்டுமே பாதுகாப்புக்கு வந்தனர். இதனால் எங்களுக்கு அவரது சம்பந்தப்பட்ட செலவுகள் குறைந்தது. தமிழ் வசனங்களை எப்படி உச்சரிப்பது என்று பயிற்சி அளித்தேன். இதனால் அவருக்கு பிராம்ப்ட்டிங் தேவைப்படவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை என்பதால், அவரது இமேஜை தாண்டி மாயசேனா கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபா வெங்கட் டப்பிங் பேசினார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவானஇப்படம், வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து எங்களுடன் பணியாற்ற சன்னி லியோன் விருப்பம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு தரப்பட்ட சம்பளம் எவ்வளவு என்று வெளியே சொல்ல முடியாது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்