மதுரை, ஜூலை 22: நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் குழந்தைவேலு, மாவட்ட அவைத்தலைவர் ஒச்சுபாலு, மாநில விவசாய அணி துணை செயலாளர் பாக்கியநாதன், பகுதி செயலாளர்கள் கோரிப்பாளைம் ராதாகிருஷ்ணன், எஸ்எஸ் மாறன், குரும்பன், மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சவுந்தரராஜன், வட்ட செயலாளர் முத்துமோகன், பகுதி துணை செயலாளர் அசோக்குமார், நிர்வாகிகள் திராவிடமாரி, செல்லூர்ராஜரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.