நடிகர் காளிதாஸ் மரணம்

சென்னை: கடந்த 1980 மற்றும் 1990களில் வெளியான படங்களில் வில்லன்களுக்கு டப்பிங் பேசியவரும், வடிவேலு மற்றும் விவேக்குடன் இணைந்து பல படங்களில் நடித்தவருமான காளிதாஸ் (65) நேற்று மரணம் அடைந்தார். அவர் மூவாயிரம் படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக காளிதாஸ் ரத்தத்தில் தொற்று ஏற்பட்டிருந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரது உடலில்  ரத்தம்  மாற்றப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி காளிதாஸ் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. காளிதாஸ் மனைவி  வசந்தா காலமாகி விட்டார். மகன் விஜய், மகள் பார்கவி உள்ளனர். பார்கவி சினிமாவில் இணை இயக்குனராக பணியாற்றுகிறார். கடைசியாக காளிதாஸ் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தில் ஒருவருக்கு டப்பிங் பேசியிருக்கிறார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை