நடராஜர் கோயிலில் மத்தியபிரதேச முதல்வர் சுவாமி தரிசனம்

சிதம்பரம், ஜூன் 2: சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை ஆந்திராவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் வந்தார். தொடர்ந்து நடராஜர் கோயிலுக்கு வந்த அவரை கீழ சன்னதியில் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் பூரணகும்ப மரியாதை செய்து கோயிலுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளை முதல்வர் மோகன் யாதவ் சுவாமி தரிசனம் செய்து, உள்பிரகாரம் வெளி பிரகாரம் வலம் வந்தார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார். முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இவரது வருகையையொட்டி சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் கீழ சன்னதி, பேருந்து நிலையம், அண்ணாமலை நகர், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை