பூந்தமல்லி: நசரத்பேட்டை ஊராட்சியில் பூந்தமல்லி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ15.50 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக், கலை கட்டடம், ரூ5.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஆரம்ப பள்ளியில் சமையலறை கட்டடம், மற்றும் ரூ2.80 லட்சம் மதிப்பில் கழிவறை கட்டடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மொத்தம் ரூ24 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை முதற்கட்டமாக ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில், ஒன்றியக் குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி சங்கர், ஊராட்சிமன்ற தலைவர் திவ்யா முருகன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்….