நங்கைமொழியில் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி தமிழர்களின் உரிமை, அடையாளங்களை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசு

உடன்குடி, ஜூன் 27: தமிழர்களின் உரிமைகள், அடையாளங்கள் மற்றும் சுய மரியாதையை பாதுகாக்க கூடிய அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்று நங்கைமொழியில் நடந்த மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசினார். உடன்குடி யூனியன் நங்கைமொழி பஞ்சாயத்தில் நடந்த மக்கள் களம் மற்றும் மக்கள் குறைகேட்டல் நிகழ்ச்சி நடந்தது. கனிமொழி எம்பி தலைமை வகித்தார். மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் ஆர்டிஓ குருசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் பாலசிங் வரவேற்றார்.

இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள், வேளாண் உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை கனிமொழி எம்பி வழங்கி பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் என்று மகளிருக்கு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருவதோடு, தமிழர்களுடைய உரிமைகள், இந்த நாட்டின் அடையாளங்கள், நமது சுய மரியாதையை பாதுகாக்கக்கூடிய ஆட்சியாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு உள்ளது.
நமது மாநிலத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர். இங்கு மட்டுமின்றி நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகத்தான் நாங்கள் உங்களை சந்திக்கிறோம். கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்து விரைவில் தீர்வு காணப்படும், என்றார். தொடர்ந்து பொதுமக்களிடம் நேரடியாக சென்று மனுக்களை கனிமொழி எம்பி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பிடிஓ ஜான்சிராணி, பழனிசாமி, திமுக மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் ஜெசிபொன்ராணி, வர்த்த அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட இலக்கிய துணை அமைப்பாளர் ரஞ்சன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மகேஸ்வரன், மதன்ராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் விஜயா, சுடலைக்கண், இசக்கிமுத்து, திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் பாலமுருகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர்கள் பாய்ஸ், மதன்ராஜ், உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், திமுக நிர்வாகிகள் ரஜினிகாந்த், சித்திரைபாண்டி, ராஜ்குமார், சாமுவேல், ஜோசப்ராஜா மற்றும் நித்யா, பத்மநாபன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு