நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்: அமைச்சர் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நகைகடன் தள்ளுபடி சான்றிதழை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பயனாளிகளுக்கு வழங்கினார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழக சட்டபேரவையில் கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி என கூட்டுறவு துறை பட்ஜெட்டில் அறிவித்தார். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, 18,443 பேருக்கு ₹63.70 கோடி வட்டியுடன் நகை கடன் தள்ளுபடி செய்த சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் லட்சுமி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் முருகன், துணைப்பதிவாளர் (காஞ்சிபுரம் சரகம்) சுவாதி, நகர திமுக செயலாளர் சன்பிராண்ட்  கே.ஆறுமுகம், யுவராஜ், தசரதன் எம்.எஸ்.சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை