நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

அண்ணாநகர்: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவைத் தலைவர் இளங்கோவன், துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, எல்.கே.சுதீஷ் உள்பட 67 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், தைப் பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைகளுக்கு ரூ3 ஆயிரம் வழங்கவேண்டும். வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும்.  கடந்த தேர்தல்களின் போது பல்வேறு கட்சியினர் சார்பில் பணப் பட்டுவாடா நடைபெற்றது. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

Related posts

பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது