நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 20 மாநகராட்சி, 125 நகராட்சி, 395 பேரூராட்சிகளில் திமுக வெற்றி: மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை:  தமிழக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களக்கு உள்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சி மேயர், துணைத் தலைவர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கான சாதாரண மறைமுகத் தேர்தல் நேற்று நடைப்பெற்றது. 21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு 20 மாநகராட்சிகளில் திமுகவும், ஒன்றில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. 21 துணை மேயர் பதவிகளில் திமுக 15ம், 2 மாநகராட்சிகளில் காங்கிரசும், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 138 நகராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 125 இடங்களில் திமுகவும், 2இடங்களில் அதிமுகவும், தலா ஒரு இடங்களில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் சுயேச்சை 4 இடங்களில் வெற்றி பெற்றது. மற்ற 4 இடங்களில் போதிய உறுப்பினர் இல்லாததால் தேர்தல் நடக்கவில்லை. 138 நகராட்சி துணைத் தலைவர் தேர்தலில் 98 இடங்களில் திமுக, காங்கிரஸ் 9 அதிமுக 7, மதிமுக 4, சிபிஐ, சிபிஎம், விசிக தலா 2 இடங்களில் வெற்றி பெற்றது. 3 இடங்களில் சுயேச்சை வெற்றி பெற்றனர். 11 இடங்களில் போதிய உறுப்பினர் இல்லாததால் தேர்தல் நடக்கவில்லை.489 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் 395 இடங்களில் திமுக, அதிமுக 18, காங்கிரஸ் 20, பாஜ 8, சிபிஎம் 3, மதிமுக, அமமுக தலா 2 இடங்கள், தலா 1 இடத்தில் சிபிஐ, விசிக, மமக மற்றும் சுயேச்சைகள்25 இடங்களில் வெற்றி பெற்றனர். மற்ற 13 இடங்களில் போதிய அளவு உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.489 பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக 331 இடங்களிலும், காங்கிரஸ் 32, அதிமுக 27, பாஜ 11, சிபிஎம் 5, பாமக, விசிக தலா 3 இடங்களில் வெற்றி. மதிமுக, அமமுக தலா 2 இடத்தில் வெற்றி பெற்றது. தேமுதிக மமக ஒரு இடத்திலும்  மற்றும் சுயேச்சைகள் 34 இடங்களில் வெற்றி பெற்றனர். 35 இடங்களில் தேர்தல் நடக்கவில்லை.   …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை