நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: கோவை மாநகராட்சியில் முடிவு வெளியான அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று திமுக கூட்டணி அபாரம்..!!

கோவை: கோவை மாநகராட்சியில் முடிவு வெளியான அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றுள்ளது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 778 வேட்பாளர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 15 லட்சத்து 65 ஆயிரத்து 158 வாக்காளர்களில், 8 லட்சத்து 39 ஆயிரத்து 109 பேர் வாக்களித்தனர். கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி 7வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் வெற்றிபெற்றார். அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி தோல்வியடைந்தார். கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் முடிவுகள் வெளியான 8 இடங்களில் 6 இடங்களில் திமுக, காங்கிரஸ் 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவை 4, 7, 31, 37, 62, 76வது வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 5, 71வது வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. * கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 5வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் வெற்றி பெற்றுள்ளார்.* கோவை மாநகராட்சி 71வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் அழகு ஜெயபால் வெற்றிபெற்றுள்ளார். * கோவை மாநகராட்சி 7வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் வெற்றிபெற்றுள்ளார். * கோவை மாநகராட்சி 76வது வார்டில் திமுக வேட்பாளர் பி.ராஜ்குமார் வெற்றிபெற்றார். வெற்றி சான்றிதழில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புமாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 2,500 போலீஸாரும், மற்ற 17 இடங்களில் 2,000 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் . கடும் சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்….

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி