நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. அதன்படி, தொழில் வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலியாக பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கவேண்டும்.இன்று விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் பெற தொழிலாளர் துறை, தொழிலாளர் ஆணையரால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்தல் நாளான இன்று மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதுபோல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் (9778619552), தொழிலாளர் துணை ஆய்வர்  கமலா (9952639441), தொழிலாளர் உதவி ஆய்வர் மாலா (9790566759), பரங்கிமலை தொழிலாளர் உதவி ஆய்வர் சிவசங்கரன் (94441 52829). காஞ்சிபுரம் முத்திரை ஆய்வர் வெங்கடாச்சலம் (9444062023) ஆகிய செல்போன் எண்களிலும் 044-27237010 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.செங்கல்பட்டு மாவட்டத்தில், பரங்கிமலை  தொழிலாளர் துணை ஆய்வர் மனோஜ் ஷியாம் சங்கர்  (8667570609), செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆய்வர் பிரபாகரன் (9944214854) மதுராந்தகம் தொழிலாளர் உதவி ஆய்வர் பொன்னிவளவன்  (9789253419), தாம்பரம் தொழிலாளர் உதவி ஆய்வர் வெங்கடேசன் (8870599105), செங்கல்பட்டு முத்திரை ஆய்வர் சிவராஜ் (7904593421), பரங்கிமலை முத்திரை ஆய்வர் வேதநாயகி (9884264814) ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு