நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் 20 பறக்கும் படை குழு

திருவள்ளூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் 20 பறக்கும் படை குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வட்டாட்சியர் நிலையில் ஒருவர், காவல் துறை அலுவலர்கள் 2 பேர், 1 வீடியோகிராபர் அடங்கிய 20  பறக்கும் படை குழுவினர் மாவட்டம் முழுவதும்  நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆவடி மாநகராட்சிக்கு 6 பறக்கும் படை குழுவினர், திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளுக்கு தலா 1 பறக்கும் படை குழுவினர், ஆரணி ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு தலா 1 பறக்கும் படை குழுவினர் என மொத்தம் மாவட்டத்தில் 20 பறக்கும் படை குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நியமனம் செய்யப்பட்டு 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  …

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்