நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றிற்கு சாதாரணத் தேர்தலுக்கான வாக்களர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டு பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேர்தல் ஆணையச் செயலாளர் சுந்தரவல்லி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், வாக்காளர் தொடர்புபடுத்தும் பட்டியலுக்கான மாவட்ட தேர்தல் அலுவலர்களின் சான்று, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் காலியிடங்களை நிரப்புதல், வாக்குபதிவு அலுவலர்களின் விவரங்களை ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், மண்டல அலுவலர்களின் நியமனம், வாக்குப்பதிவு, இயந்திரங்கள் முதல்நிலை சோதனை, தேர்தலுக்கான பொருட்களின் இருப்பு, வாக்கு எண்ணிக்கை மையங்கள் இறுதி செய்தல், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி இடங்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல் மற்றும் வாக்குப்பதிவு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துதல், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலை சுமூகமான முறையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கிட இந்த கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி