நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2வது நாளில் ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கு போட்டியிட நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் துவங்கியது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் நாளான நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், 2ம் நாளான நேற்று திருவள்ளூரில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏதுவாக தேர்தல் நடத்தும் அலுவலர் சி.வி.ரவிச்சந்திரன் தலைமையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் டி.நாகராஜன், சீனிவாசன், கோவிந்தராஜூலு, சுதாகர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் 2ம் நாளான நேற்றும் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல் திருமழிசை பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கி.ரவி தலைமையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் திருமழிசை பேரூராட்சியிலும் 2வது நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளிலும் போட்டியிட நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்